இலண்டன் ஶ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் மூலமாக எமது புலம்பெயர் உறவுகளின் ஆதரவுடனான அனர்த்த நிதிசேகரிப்பின் மூலம் எமது விவேகானந்த கல்லூரியின் சமூக நலன் சேவைப் பிரிவின் 2ம் கட்ட நிவாரணப்பணி இன்று மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் நடைபெற்றது.
இதன் போது கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் உதவி மூலமாக 48 குடும்பங்களிற்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
கிராம சேவை உத்தியோகத்தரின் வழிகாட்டுதலில் அன்றாட கூலித்தொழில் செய்யும் குடும்பங்களிற்கான உதவிகளை அவர்களின் வீடுகளிற்கு கொண்டு கொடுக்கப்பட்டது.